தூத்துக்குடி, மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட மடத்தூர் அங்கன்வாடி மையம் அருகில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையாளர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா வரவேற்புரையாற்றினார். அதனை தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பகுதி சபா கூட்டம் மட்டுமின்றி ஒவ் வொரு புதன்கிழமையும் 4 மண்ட லங்களிலும் குறைதீர்க்கும் கூட்ட மும் நடைபெற்று வருகிறது. இணையதளம், வாட்ஸ்அப் வழியாகவும் வரும் புகார்களையும் குறிப்பெடுத்து கொண்டு அதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மக்கள் அளித்துள்ள மனுக்க ளின் அடிப்படையில் ஏற்கனவே மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் மற்றும் வடிநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த அதிமுக ஆட்சி யில் இந்த பகுதி எப்படி இருந்தது என்பது எல்லாம் இந்த பகுதி மக்களுக்கு நன்கு தெரியும். திமுக ஆட்சி அமைந்த பின் எவ்வளவு வளர்ச்சிப் பணிகள் நடை பெற்றுள்ளது என்பதும் உங்க ளுக்குத் தெரியும். மக்கள் நலன் தான் முக்கியம் என்று நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகி றோம். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து பணியாற்றுவோம். இப்பகுதியில் கட்டப்பட்டு வரு கின்ற இஎஸ்ஐ மருத்துவமனை இன்னும் 3 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும். மேலும் தினசரி இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து அடிப்படை பணிகளும் இந்த பகுதிக்கு முழுமையாக செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், உதவி செயற்பொறியாளர் இர்வின்ஜெபராஜ், மாநகராட்சி இளநிலை பொறி யாளர் பாண்டி, குடிநீர் குழாய் ஆய்வாளர் மாரியப்பன், பகுதி சபா உறுப்பினர்கள் சக்திவேல், ஞானபிரகாசம், முத்துவேல் ராஜ், சீனிவாசன், ராஜ்குமார், திமுக வட்ட செயலாளர் பொன் பெருமாள், வட்ட பிரதிநிதிகள் சோமசுந்தரம், இளங்கோவன், கணேசன், இளைஞரணி ராஜா, சுகாதார துறை டாக்டர் ஜால்சி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.