fbpx
Homeபிற செய்திகள்கல்லாறு பகுதியில் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள்- கண்டு வியக்கும் பொதுமக்கள்

கல்லாறு பகுதியில் குவிந்து வரும் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள்- கண்டு வியக்கும் பொதுமக்கள்

மகரந்த சேர்க்கை மூலமாக தாவர இனங்களை பெருக்கி விவசாயிகளின் உற்ற தோழனாக பட்டாம்பூச்சிகள் இருந்து வருகின்றன. ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடு காரண மாக மனிதர்கள் வாழும் பகுதிகளில் காண்பதே அரிதாகி வருகிறது.
இதுவரை இயற்கை சூழல் பாதிக்கப்படாத அடர்ந்த மலை காடுகளையே தங்களது வசிப்பிடமாக இந்த வண்ணத்துப்பூச்சி இனங்கள் கொண்டுள்ளன.

அதேபோல் இப்பட்டாம்பூச்சிகள் இயற்கைச் சூழலுக்கு ஏற்றார் போல் பருவமழை துவங்கும் முன்பாக ஆண்டுக்கு இருமுறை இடப்பெயர்ச்சி செய்யும் இயல்புடையது.
அந்த வகையில் சத்தியமங் கலம் புலிகள் காப்பக பகுதியான தெங்குமரஹடாவில் இருந்து மேட்டுப்பாளையம் கல்லாறு முதல் ஆனைகட்டி வரை தற்போது பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த இடப்பெயர்ச்சி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக தவ றாமல் நடக்கும் ஒரு இயற்கை சார்ந்த தொடர் நிகழ்வாகும்.

இந்த நிகழ்வானது வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே நடைபெறும். அவ்வாறு நீண்ட தூர பயணத்திற்கு தேவை யான சத்துக்களை பெற மலை அடிவாரத்தில் உள்ள மேட் டுப்பாளையத்தில் இயற்கை சூழல் மாசுபடாத கல்லாறு பகுதியில் தற்போது பல்லாயிரக் கணக்கான பட்டாம்பூச்சிகள் குவிந்து வருகின்றன.

மலை மீதிருந்து வழிந்து வரும் தண்ணீர் வளமான மண்ணை அடித்துக்கொண்டு வருவதால் இதன் கரைப்பகுதியில் எண் ணற்ற பட்டாம்பூச்சிகள் குவி கின்றன.
கரைப்பகுதியில் உள்ள மண்ணில் அமர்ந்து அதில் உள்ள தாதுச்சத்துக்களை உறிஞ்சி தங்களது உடலுக்கு தேவையான சக்தியை சேகரித்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேட்டுப் பாளையம் வனக்கல்லூரியின் பேராசிரியர் பரணிதரன் கூறு கையில் பட்டாம்பூச்சிகள் மகரந்த சேர்க்கை மூலமாக விவசாயிகளின் உற்ற தோழனாக இருந்து வருகிறது.

இதனால் தாவர இனங்கள் பல்கி பெருகி வருகின்றன. வழக்கமாக இந்த பட்டாம்பூச்சிகள் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் 10 முதல் 15 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வலசை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும்.

அவ்வாறு வலசை செல்லும் போது பூக்கள் அதிகம் இருக்கும் பகுதிகள்,தேன் அதிகம் உள்ள தாவர இனங்களில் உள்ள தேனை உண்டும்,நீண்ட தூர பயணத்திற்கு தேவையான சத்துக்களை பெறவும் பயன்படுத்தி வருகின்றன.

எப்படி மரபு ரீதியாக காட்டு யானைகள் ஒரே பாதையை வலசை பாதையாக பயன்படுத்தி வருகி றதோ?அதேபோல் தான் பட்டாம்பூச்சி இனங்களும்.

இந்த வலசைப்பாதையை கடந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கும். அதனால் தான் மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பட்டாம்பூச்சிகள் அதிகமாக காணப்படுகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img