சென்னை பெரம்பூரில் உள்ள ஹாட்ஃபுட் ஸ்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, அப்போலோ டயர்ஸ் “ ரோடு டூ ஓல்ட் ஃட்ரப்பர்டு எனும் கால்பந்து தொடரில் த்ரீ வைஸ் மன்கீஸ் அணி தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்த அணி, கால்பந்து வீரர்களின் கனவான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக, ஒரு அணியில் 5 பேர் பங்கேற்கும் வகையில் லீக் சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தொடர்ந்து அப்போலோ டயர்ஸ் ரோடு டூ ஓல்ட் ஃட்ரப்பர்டு திட்டத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் செல்லும் அணி எதுவென்பதைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்று சென்னை பெரம்பூரில் உள்ள ஹாட்ஃபுட் ஸ்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பரபரப்பான இறுதிப் போட்டியில் த்ரீ வைஸ் மன்கீஸ் அணி ஸ்விக் அணியை பெனால்டி முறையில் 3-&2 (2&-2) என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி பெற்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து த்ரீ வைஸ் மன்கீஸ் கேப்டன் ஸ்காட் மோரஸ் கூறுகையில், “ஒரு இந்திய கால்பந்து வீரன் என்ற முறையில் மான்செஸ்டர் யுனைடெட் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைக்கையில் மெய்சிலிர்க்கிறது” என்றார்.
அப்போலோ டயர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் ரெமுஸ் டி க்ரூஸ் கூறுகையில், “இந்த முன்னெடுப்பு இந்தியாவில் உள்ள இளம் கால்பந்து வீரர்கள் தங்கள் திறனை மேம்படுத்த உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம்“ என்றார்.