திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் குழந்தைகள் தங்களது இனி மையான குரலில் பாடல் பாடியும், நடனம் மற்றும் நாடகம் வாயிலாக இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை அனைவரது கண் முன்னே கொண்டு வந்தனர்.
மேலும் கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடுகிறோம் என்பது பற்றியும் இவ்வுலகில் இயற்கை, உயிரினங்கள் மற்றும் மனிதர்களை இறைவன் எவ்வாறு உருவாக்கினார் என்பது பற்றியும் தத்ரூபமாக நடித்துக் காண்பித்து அனைவரது பாராட்டையும் பெற்றனர்.
விழாவில் கலந்துகொண்டு நடனம், நாடகம், பாடல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்ட அனைத்து மழலைச் செல்வங்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி செயலாளர் டாக்டர். சிவகாமி இயக்குநர் சக்திநந்தன் துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் இலாவண்யா ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.