‘சேவ்’ தொண்டு நிறுவனம் சார்பாக பாலின வன்முறை மற் றும் பாகுபாடு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு, பல்லடம் ரோட்டில் உள்ள ரமணாஸ் ஹோட்டலில் நடந்தது. சேவ் செயல் இயக்குநர் அ.வியாகுல மேரி கலந் துரையாடும்போது, பாலியல் உணர்வுகளை கையாளும் கல்வியானது 12 வயதில் இருந்து வளரிளம் பருவத்தினருக்கு அளிக்க வேண்டும். ஊடகங்களை முறையாக கையாளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும் என்றார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பாதுகாப்பு அலுவலர் ஸ்டெல்லா பேசும்போது, 5 வயது முதல் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண்களும், பெண்கள் தங்கள் நண்பர்களை தேர்ந் தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அன்புடனும் அக்கறையுடனும் நடத்த வேண்டும் என்றார்.
சுகாதார நிலைய அலுவலர் உஷா ராணி பேசும்போது, தற்போதிருக்கும் சூழ்நிலையில் நிறைய பெண் குழந்தைகள் கர்ப்பிணியாக இருக்கும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எனவே, இதனை முற்றிலும் தடுக்க, பெண்கள் தங்களுடைய மகள்களின் மாதவிடாய் கால சுழற்சியை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் மற்றும் வீரபாண்டி, ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த தன் னார்வலர்கள் பங்கேற்றனர்.