fbpx
Homeபிற செய்திகள்அமராவதி பிரதானக் கால்வாய் வலது கரை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்த கலெக்டர்

அமராவதி பிரதானக் கால்வாய் வலது கரை சீரமைக்கும் பணியை ஆய்வு செய்த கலெக்டர்

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் கடந்த 12ம் தேதி அன்று மடத்து க்குளம் வட்டம், மேற்கு கொமரலிங்கம் கிராமம் அமராவதி பிரதானக் கால்வாய் வலது கரை சீரமைக்கும் பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறி ஸ்துராஜ் செய்தியாளர்க ளிடம் தெரிவித்ததாவது: மடத்துக்குளம் வட்டம், மேற்கு கொமரலிங்கம் கிராமம் அமராவதி பிரதானக் கால்வாய் வலது கரையில் உடைப்பு ஏற்பட்டதை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமராவதி அணை யிலிருந்து பிரியும் அமராவதி பிரதானக்கால்வாய் மூலம் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி பிரதானக் கால்வாய் பாசனப் பகுதிகளில் பயிர்களை காப்பாற்றும் பொருட்டு முதல் சுற்று நனைப்புக்கு 01.02.2024 முதல் அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமராவதி பிரதானக்கால்வாய் வலது கரையில் உள்ள கீழ்மட்ட குகைவழிப்பாதையின் வலது புற பக்கவாட்டின் உட்புறச் சரிவில் உள்ள சிமென்ட் பலகைகளின் சிமெண்ட் காரை இணைப்புகளில் கசிவு ஏற்பட்டு வலது கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அணையில் அமராவதி பிரதானக்கால்வாயின் மதகு அடைக்கப்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

அமராவதி பிரதானக் கால்வாய் சரகம் மைல் 7.5.440 முதல் மைல் 16.5.000 வரையிலான பகுதிகளில் உள்ள 7 சுரங்க வழி பாதைகள் 5 தலைப்பு மதகுகள் 18 நேரடி மதககள் உள்ளிட்ட குறுக்குக் கட்டுமானங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 07.02.2024 அன்று அமராவதி பிரதானக் கால்வாய் மைல் 10/5/560 -ல், சுரங்க வழி பாதையில் ஏற்பட்ட உடைப்பினை வலுவூட்டப்பட்ட கற்காரை மூலம் புனரமைக்கும் பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது.

மேலும், இப்பணியினை துரிதமாக முடித்து, வாய்க்காலில் விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறு த்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) கோபி மற்றும் செய்தியாளர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img