fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் 2024ம் ஆண்டில் அரசு சார்பில் 446 மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலையில் 2024ம் ஆண்டில் அரசு சார்பில் 446 மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது

கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண்கண்ணாடிகள் பெற்ற பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதுடன் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், இதயம் காப்போம், சிறுநீரகம் காப்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டு 731 பள்ளிகளில் 1,55,509 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களில் 5 ஆயிரத்து 473 மாணவ, மாணவியர்களுக்கும், 2022 23 ஆம் ஆண்டு 731 பள்ளிகளில் 1,75,994 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 8 ஆயிரத்து 430 மாணவ, மாணவியர்களுக்கும், 2023 -24 ஆம் ஆண்டு 731 பள்ளிகளில் 1,94,825 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 14 ஆயிரத்து 247 மாணவ, மாணவியர்களுக்கும், 2024 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை 736 பள்ளிகளில் 1,71,771 மாணவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களில் 8 ஆயிரத்து 446 மாணவ, மாணவியர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், மேல்கச்சிராப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிரபு கூறியதாவது:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், மேல்கச்சிராப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நான் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.

இப்பள்ளியில் 117 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் கண் ஒளி விலகல் பிழை உள்ளவர்கள் என 9 மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வாயிலாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் முதற்கட்டமாக உடனடியாக 5 மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் பள்ளி மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று வருகிறார்கள். இதுபோன்ற சிறப்பு திட்டங்களை பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பள்ளி மற்றும் பெற்றோர்கள் சார்பாக நிறைந்த மனதுடன் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img