fbpx
Homeபிற செய்திகள்கல்வி உதவித்தொகை வழங்குவதில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம்

கல்வி உதவித்தொகை வழங்குவதில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தண்டராம்பட்டு வட்டம், பெருந்துறைப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி முன்னிலை வகித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தண்ட ராம்பட்டு வட்டத்திற் குட் பட்ட பெருந்துறைப்பட்டு கிராமத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் சிறப் பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலேயே மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாம் வாயிலாக அதிக மனுக்களை பெற்ற மாவட்டமாக திரு வண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது. இம்முகாம் வாயி லாக 81 ஆயிரம் மனுக்களை பெற்றிருக்கிறோம். மேலும் மற்ற மாவட்டங்களை காட் டிலும் 15 துறைகளைச் சார்ந்த 44 சேவைகளின் கீழ் சுமார் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மனுக்களை பெற்றிருக்கிறோம். இம் முகாமின் மூலமாக குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர் களின் சாதிச்சான்றிதழ்களை வழங்குவதற்கான ஒரு சிறப்பு திட்டமாக மாற்றி சாதிச் சான்றிதழ்களை வழங்கி செயல்படுத்திருக்கிறோம்.

பல்வேறு துறைகளின் சார்பாக 675 நபர்களுக்கு ரூ.2 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உத விகளை வழங்குகின்றோம். மேலும் கள்ளச்சாராயம் குடிப்பதன் மூலமாக கண் பார்வை இழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே கள்ளச்சாராயம் தொடர்பாக உங்கள் ஊரில் ஏதாவது விற்பனை இருப்பின் அரசிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பட்டா மாற்றம் தொடர் பாக 65 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பாக 67 பயனாளிக ளுக்கும், ரூபாய் 50 ஆயிரம் மதிப்பீட்டில் 1 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா, 104 பயனாளிகளுக்கு நத்தம் சிட்டா நகலுக்கான ஆணையினையும், 69 பயனாளிகளுக்கு இருளர் சாதிச் சான்றிதழ்களும், 2 பயனாளிகளுக்கு முதல் பட்டாதாரி சான்றிதழ்களும், 10 பயனாளிகளுக்கு சிறு குறு விவசாயி சான்றிதழ்களும், 10 பயனாளிகளுக்கு ஓசி (OC) சான்றிதழ்களும், 6 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களும், சமூக பாது காப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சத்து 7 ஆயித்து 500 மதிப்பீட்டில் 28 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் உதவித்தொகையும், ரூ. 8 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் 46 பயனாளிகளுக்கு மாற்றுத்தி றனாளிகள் உதவித்தொகையும் என பல்வேறு நலத் திட் டங்கள் மொத்தம் 675 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி யே 7 லட்சத்து 23 ஆயிரத்து 616 மதிப் பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தண்டராம்பட்டு ஒன்றி யக்குழுத் தலைவர் பரிமளா கலையரசன், வட்டாட்சியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண் டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img