fbpx
Homeபிற செய்திகள்மாவட்டம் முழுவதும் 30 ‘முதல்வர் மருந்தகம்’ செயல்படுகிறது - விலையில் 25% வரை தள்ளுபடி: திருவண்ணாமலை...

மாவட்டம் முழுவதும் 30 ‘முதல்வர் மருந்தகம்’ செயல்படுகிறது – விலையில் 25% வரை தள்ளுபடி: திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 30 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது, என்று மாவட்ட ஆட்சியர் கே.தர்ப்பக ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 முதல்வர் மருந்தகங்கள் 24.02.2025 முதல் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 18 முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு சங்கத்தினாலும், 12 முதல்வர் மருந்தகங்கள் தொழில் முனைவோர் மூலமாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் மருந்தகங்கள் வழி மக்கள் பயன் பெ றும் வகையில் ஜெனரிக் மருந்துகள் (Generic Medicines) சந்தை விலையை விட 75% குறைந்த விலையிலும், சர்ஜிக்கல்ஸ் (Surgicals), நியூட்ரா சூட்டிக்கல்ஸ் (Neutraceuticals), சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் மற்றும் OTC Products ஆகிய அனைத்து விதமான மருந்துகளும் 25% வரை தள்ளுபடியில் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்காணும் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொட ங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை முதல்வர் மருந்தகங்கள் வழி பெற்று கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன் விவரம்:
திருவண்ணாமலை வேளாண்மை உற்பத்திய £ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் -நெ.1 லட்சுமிபுரம், காந்திநகர், லட்சுமிபுரம், திருவ ண்ணாமலை, நல்லவ ன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் -143, லட்சுமி நகர், தண்டராம்பட்டு மெயின் ரோடு. சமுத்திரம் கிராமம். நல்லவன்பாளையம், தானிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் – சேலம் மெயின் ரோடு, தானிப்பாடி கிராமம் மற்றும் அஞ்சல், தண்டராம்பட்டு வட்டம், தண்டராம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் – சாத்தனூர் அணை ரோடு, தண்டராம்பட்டு வட்டம், செங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தந்தை பெரியார் நகர் வளையாம்பட்டு ரோடு, செங்கம், காஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 403 திருவண்ணாமலை மெயின் ரோடு காஞ்சி செங்கம் வட்டம்.

கேட்டவரம்பாளையம் தொடக்க – வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் – கங்கையம்மன் கோவில் *தெரு, கேட்டவர ம்பாளையம் கிராமம் மற்றும் அஞ்சல், கலசபாக்கம் வட்டம். மங்கலம் தொடக்க வேளாண்மை 1 கூட்டுறவு கடன் சங்கம் -நெ.375/483 அவலூர்பேட்டை மெயின் ரோடு, – பஜனை கோவில் தெரு, மங்கலம். – ஆவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் -விழுப்புரம் • மெயின் ரோடு. ஆவூர் கிராமம். – கீழ்பென்னாத்தூர் வட்டம்.

போளூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை – சங்கம் -நெ.33/கி/3 டைவர்சன் சாலை போளூர், கண்ண மங்கலம் தொடக்க ‘வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் – நெ.51, கவரை தெ, கண்ணமங்கம் ஆரணி வட்டம், எஸ்.வி. நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் – நெ.1/439- மாரியம்மன் கோவில் தெரு. எஸ்.வி.நகரம், பெரணமல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கம் – உப்புக்காரமேட்டுத்தெரு பெரணமல்லூர் அஞ்சல் வந்தவாசி – வட்டம், கீழ்கொடுங்காலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கம் – நெ.301 தரைதளம், கடைவீதி கீழ்கொடுங்காலூர்.

திருவத்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் – நெ.119/30, காந்தி சாலை, செய்யாறு வட்டம், தூசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் -784/3, ரோடு சாலை, மாமண்டூர் மெயின் ரோடு, வெம்பாக்கம், செங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 414, செய்யாறு முதல் அணைக்கட்டு சாலை, கனமுருகன் பூண்டி கோவில் அருகில் வெள்ளை கிராமம், செய்யாறு வட்டம், தெள்ளார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் – கோட்டைக்கார தெரு. தெள்ளார் அஞ்சல், வந்தவாசி வட்டம். கார்த்தி கேயன் முருகன் -நெ.141(2), செட்டித்தெரு, பிரம்மதேசம் கிராமம். வெம்பாக்கம் வட்டம்.

ரஞ்சிதா ஜெயக்குமார் – நெ.203, ரோடு தெரு, கொருக்காத்தூர், செய்யாறு வட்டம், பழனியப்பன் -நெ.293, பெங்களூரு மெயின் ரோடு, பக்கிரிபாளையம் கிராமம் (ம) அஞ்சல், செங்கம் வட்டம், சிபு சரவணன் நெ.306, வேலூர் மெயின் ரோடு, மல்லவாடி. ரமேஷ் பெரியசாமி நெ.280, நேரு நகர். கனபாபுரம் கிராமம். கீழ்பென்னாத்தூர் வட்டம், சிவகுமார் மணி – நெ.623, பிரதான சாலை, மங்கலம். பிரவீனா திருமூர்த்தி நெ.86, திண்டிவனம் மெயின் ரோடு, சோமசிபாடி கிராமம் (ம) அஞ்சல், கீழ்பென்னாதூர் வட்டம், சுந்தர்ராஜ் – நெ.186, கோட்ரஸ் ரோடு, வாணாபுரம் கிராமம் மற்றும் அஞ்சல், தண்டராம்பட்டு வட்டம். ஜெயலட்சுமி – நெ.102/1/31ஏ. பாடசாலை தெரு, இசுகழிகாட்டேரி. சாந்திப்ரியா -756, திருக்கோவிலூர் மெயின் ரோடு, காமராஜ் நகர், தென்மாத்துர், மஞ்சுளா ஜெயபால் -41 புது சி சி சாலை, புதுப்பேட்டை, கண்ணமங்கலம், ஆரணி தாலுகா, கீர்த்தனா – நெ.65 பி/5, கிருஷ்ணன் தெரு, திருவண்ணாமலை.

மேற்கண்ட முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருத்துகள் வாங்கி பயனடையுமாறு திருவண்ணாமலை மாவ ட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img