தமிழ்நாடு அரசாங்கத்தின் மின்சார வாரியத்துறை, தொழில்துறை பயன்படுத்தும் மின் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை பீக் ஹவர்ஸ் சார்ஜ் 15 சதவீதம் , நிலை கட்டணம் ரூ. 3920-லிருந்து, ரூ.17,200 உயர்த்தினர்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் முதலீடு செய்து அமைத்த சோலார் மின்சாரம் தயாரிப்புக்கு ரூ.1.53 கட்டணம் விதித்து, சில மாதங்களுக்கு முன் அவைகளையும் நடைமுறைபடுத்தினர். இது தொழில் துறைக்கு கடும் நெருக்கடியாக அமைந்தது.
இந்நிலையில், சிறு, குறு தொழில் முனைவோர் கடும் நெருக்கடியில் இருப்பதனால் உயர்த்திய கட்டணங்களை திரும்ப பெற வலியுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் நிருபர்களை சந்தித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் கூறியதாவது:
13 லட்சம் சிறு, குறு தொழில் முனைவோரை கொண்ட தமிழ்நாடு தொ ழில்துறை, நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 கோடி நபர்களுக்கான வேலைவாய்ப்பை தந்து வருகின்றது. தொழில் வளர்ச்சியில் சிறு, குறு தொழிலின் பங்கு பெருமளவில் இருக்கின்றன.
இந்தநிலையில், தமிழ்நாடு அரசாங்கம் உயர்த்திய தொழில் துறை பயன்பாட்டுக்கான பீக் ஹவர்ஸ் கட்டணம், நிலை கட்டணம், சோலர் உற்பத்தி கட்டணம் உள்ளிட்ட மின்சார கட்டணம் கடும் நெருக்கடிக்கு தள்ளி இருக்கின்றது. தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில், தமிழ்நாடு முழுவதும் எட்டு கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப் பட்டு இருக்கின்றன.
ஆனால் இதுவரை முதல்வரை சந்திக்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முதல்வர் முனைப்பு காட்டி வருகிறார். இந்நி லையில், சிறு, குறு தொழில் முனைவோரை சந்திக்காமல் இருக்கின்றார். உடனடியாக எங்களை சந்தித்து, கோரிக்கைகளை பரிசீலித்து, வருகின்ற தமிழ் நாடு அரசாங்கத்தின் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
ஒரு வேளை பட்ஜெட்டில் தங்களின் எதிர்பார்ப்புகள் இல்லை என்றால், வருகின்ற நாடா ளுமன்ற தேர்தலில் களம் இறங்குவோம். அந்த முடிவை சென்னையில் அறிவிப்போம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், அரசு தரப்புக்கு தொழில்துறை சார்பாக ஆதரவு தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.