இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னை தான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.
மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி, மகராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு.
இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த மாதம் தமிழ்நாடு 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இது, இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 32.6% மாநிலத்தின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நம்பர் 1 எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாளராக தனது இருப்பை தொடர்ந்து உறுதி செய்ய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர்களுக்கான புதிய மாநில கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நம்பர்-1 சாதனைகள் பட்டியல் நிரம்பி வழியட்டும்!