fbpx
Homeபிற செய்திகள்வேளாண் சாகுபடி ரசாயன உர பயன்பாடு குறைக்க விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

வேளாண் சாகுபடி ரசாயன உர பயன்பாடு குறைக்க விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

தர்மபுரி மாவட்டம் பருவதன அள்ளியில் விவசாயிகளுக்கு வேளாண் சாகுபடி ரசாயன உரங்க ளின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான பயிற்சி முகாம் வியாழக் கிழமை நடை பெற்றது.

பருவதன அள்ளி கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) தேன்மொழி மற் றும் வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவி யாளர்.) சித்ரா உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சிவக்குமார் வேளாண் சாகுபடியில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது மற்றும் மண்வளம் குறித்து பயிற்சி அளித்தார்.

வேளாண்மை உதவி இயக்குநர் .சி.சுப்ரமணியன் மற்றும் வேளாண் அலுவலர் இரா.அன்பரசு இயற்கை விவசாயி தனசேகரன் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தார். மற்றும் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ம.அசோக்குமார் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் கலை பிரியா மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img