சின்னியம்பாளையம் போர்வெல் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
கோவை சின்னியம் பாளையம் அருகே நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற போர்வெல் லாரி அவினாசி சாலை யில் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர், கிளீனர் உட்பட 3 பேர் காயமடைந் தனர்.
லாரி கீழே கவிழ்ந்த நிலையில், டீசல் டேங்கில் இருந்து டீசல் வெளியாகி சாலை முழுவதும் பர வியதால் பரபரப்பு ஏற் பட்டது. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தி, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கோவை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இந்த விபத்து காரணமாக கோவை-அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.