fbpx
Homeபிற செய்திகள்கோவையில் யானை தந்தம் விற்க முயற்சி - பெண் உள்பட 6 பேர் கைது

கோவையில் யானை தந்தம் விற்க முயற்சி – பெண் உள்பட 6 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையம் அருகில் தனியார் குடோன் ஒன்றில் யானை தந்தங்கள் விற்க முயற்சி செய்வதாக தமிழ் நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு ஆணை யத்மற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோவை சரக வனத் துறையினர் அந்த இடத்தை திடீரென சோதனை போட்டனர்.

அப்போது கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் மகள் சுமதி (55), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மன்சூர் மகன் ஆஸாத் அலி(45), கோவை சங்கனூர் நடரா ஜன் மகன் நஞ்சப்பன் (47), வெள்ளமடை ஸ்ரீ மகன் சந்தோஷ் பாபு, பாப்பநாயக்கன்பாளையம் சந்தானம் மகன் கோவிந்த ராஜுலு(65) ஆகிய ஐந்து பேரும் டிராவல் பேக் ஒன்றில் இரண்டு தந்தங்களுடன் குடோனின் உள்பகுதியில் அமர்ந்து தந்தத்தை விற்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களை கையும் களவுமாக கைது செய்து விசாரணை மேற் கொண்டதில் மேற்கண்ட 5 நபர்களும் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்தது உறுதியானது. மேலும் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் இரண்டும் வெங்கடபுரம் ரங்கபாஸ்யம் மகன் செந்தில் வேலன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.

தந்தங்களை பறிமுதல் செய்து அவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். கைதான 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img