fbpx
Homeபிற செய்திகள்கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரிக்கு அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரிக்கு அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

தூத்துக்குடி மாவட்டம், வானரமுட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் 23 மாணவர்கள் மட்டும் 11 மாணவிகள் வஉசி வேளாண்மைக் கல்லூரிக்கு 05.02.2024 (திங்கள் கிழமை) களப்பயணம் மேற்கொண்டனர்.

இதில் நேரடி நெல் விதைப்பு, நெற்பயிற்கான மேலுரம் இடுதல், ஒருங்கிணைந்த பண்ணையம், மற்றும் மண்புழு வளர்ப்பு பற்றி கல்லூரி விஞ்ஞானிகள் செயல்விளக்கங்களை அளித்தார்கள். முதன்மையர் முனைவர். ம. தேரடிமணி வேளாண் இளங்கலைப் படிப்பு, உதவி தொகை திட்டங்கள் மற்றும் வேளாண் சார்ந்த வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கம் அளித்தார்.

மு.ஹேமலதா (பேராசிரியர் மற்றும் தலைவர் -உழவியல் துறை, நெல் விதைப்பற்கான வயல் தயாரிப்பு மற்றும் நேரடி நெல் விதைக்கும் கருவியின் மூலம் நேல் விதைப்பிற்க்கான தொழில் நுட்பம் பற்றிய செயல் விளக்கங்களை பள்ளி மாணவருக்கு செய்து காண்பித்தார்.

ஜோதிமணி (பேராசிரியர் மற்றும் தலைவர் &மண்ணியல் துறை) , நெற்பயிரில் தழைச்சத்து மேலாண்மை தொழில் நுட்பமான நானோ யூரியா அளிப்பது மற்றும் பச்சை வண்ண அட்டையை உபயோகிப்பது பற்றிய செயல் விளக்கங்களை பள்ளி மாணவருக்கு செய்து காண்பித்தார்.

ஜெ. புவனேஸ்வரி (உதவிப் பேராசிரியா மற்றும் பண்ணை மேலாளர் -உழவியல் துறை), ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் மண்புழு வளர்ப்பு பற்றி செயல் விளக்கமளித்தார்.

இந்த களப்பயணத்தில் வானரமுட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியின் தொழில் கல்வி ஆசிரியர் பாலமுருகன், தொழில் கல்வி பயிற்றுநர் சே.விஜய் மற்றும் ஆசிரியர் ந.விஜயலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img