fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்

தூத்துக்குடியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி மற்றும் கழுகுமலை பேரூராட்சிப் பகுதிகளில் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கழுகுமலை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரியத்தின் வாயிலாக சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் மற்றும் உள்ளூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலமாக கழுகுமலை பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிக ளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், 15வது வார்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங் கப்பட்டுவரும் குடிநீர் விநியோகம் குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்து, குடிநீரினை அருந்தி அதன் தரத்தினை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கழுகுமலை பேருந்து நிலையம் அருகில் கலைஞர் நகர்ப்புற மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் திருமண மண்டப கட்டுமானப் பணிகளையும், சரவணைப் பொய்கை குளத்தில் ரூ.93 லட்சம் செலவில் தூர் வாரும் பணி மேற்கொண்டு தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

பின்னர், நாலாட்டின் புதூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யத்தின் நீரேற்றும் நிலையத் திலிருந்து சீவலப்பேரி கூட் டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக கழுகுமலை பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் விநியோகத்தின் அளவு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், கோவில்பட்டியில் சுமார் 3.25 ஏக்கர் பரப்பளவில் ரூ.8.50 கோடி செலவில் நடைபெற்று வரும் தினசரி சந்தை கட்டுமானப் பணிகளை செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன், கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா, நகராட்சி செயற்பொறியாளர் சனல்குமார், செயற்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ராமசாமி, உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) ஹரி ஹரன், கோவில்பட்டி வட்டாட்சியர் சரவண பெருமாள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img