fbpx
Homeபிற செய்திகள்வரியில்லா பட்ஜெட் - தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் தாக்கல்

வரியில்லா பட்ஜெட் – தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் தாக்கல்

தூத்துக்குடி மாநகராட்சியில் உத்தேச வரவு செலவு அறிக்கையை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் “2024-2025 ஆம் ஆண்டுக்கான உத்தேச பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்தார். இதில் புதிதாக வரி விதிப்பு எதுவும் இடம்பெறாது என்று தெரிவித்தார்.
பின்பு மேயர் ஜெகன் பேசியதாவ: கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் செய்த கனமழையால் தூத்துக்குடியில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது.

தமிழக முதல்வர் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டார். ஒரு வார காலத்திற்கு தலைமைச் செயலகமே தூத்துக்குடியில செயல்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு உடனிருந்து பணிகளை மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் இருந்து மீண்டும் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியினை மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

மேலும் தேசிய அளவிலான தூய்மை நகரங்கள் பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை தூத்துக்குடி பெற்றுள்ளது. மாநகரை சுகாதாரமிக்க தூய்மையான நகரமாக மாற் றுவதற்காக உறுதுணையாக இருந்த மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர மக்கள், துணை மேயர், மண்டல தலைவர்களுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும், தூய்மை கவலர்களுக்கும், மேயர் நன்றி தெரிவித்து ஆணையர் தினேஷ் குமாருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அ.தி.முக உறுப்பினர் மந்திரமூர்த்தி பேசு கையில், “திரு.வி.க. பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும். சொத்து வரியை ஒராண்டுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையர் தினேஷ்குமார், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் அகற்றப்பட்டுவிட்டது.

சுமார் 3 ஆயிரம் ஏக்கர் அளவில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் வெள் ளநீரை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முடியாது.

இது தொடர்பாக சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
மேலும் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வெள்ள நிவாரண நிதி ரூ.6ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

கூட்டத்தில் துணை ஆணையர் ராஜாராம், மாநகர பொறியாளர் பாஸ்கரன், துணை செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் ராமச்சந்திரன், பிரின்ஸ், மாநகர் நல அலுவலர் சுமதி, மாநகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி ஆணையர்கள் சந்திரமோகன், தனசிங், சேகர், மாநகராட்சி குழு தலைவர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கனகராஜ், அதிஷ்டமணி, சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகரன், ஹரி, கணேஷ், ராஜபாண்டி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img