fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாநகரில் இனிவருங்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன்...

தூத்துக்குடி மாநகரில் இனிவருங்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை – மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகரில் இனிவருங்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று மேயர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநக ராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் இன்று காலை நடந்தது. கூட்டம் தொடங்கியது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் பேசிய மேயர், “தூத்துக்குடியில் கோரம் பள்ளம், செங்குளம் மாடன் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓடைகள் சீரமைக் கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் மாநகரில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காணும் பொங்கலை மக்கள் கொண்டாடும் வகையில் மாநகராட்சி பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைள் மற்றும் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் 100வது பிறந்த நாள் கொண்டாடிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. பின்னர் மழைக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தொழில் உரிமம் கட்டண உயர்வு உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img