எட்டையாபுரத்தில் 94.90-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்நிலை கருவூல கட் டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் திறந்து வைத்தார். நிகழ்விற்கு விளாத்திகுளம் சட் டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலை மை வகித்தார்.
இதில் மாவட்ட கருவூல அலுவலர் மகாராஜன், உதவி கருவூல அலுவலர் உமா மகேஸ்வரன், கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் ஜெயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஜவஹர், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதி கணேசன்,
கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.