வல்லநாடு ஊராட்சியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மார்டின் ராணி, வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன், செயற்பொறியாளர் காட்வின் இஸ்ரவேல், உதவி செயற்பொறியாளர் ஜெகவீரபாண்டி, மாவட்ட ஊராட்சித்தலைவர் அ.பிரம்மசக்தி, கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வல்லநாடு ஊராட்சி மன்றத்தலைவர் சந்திரா முருகன், கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளா்கள் ராமசாமி சுரேஷ்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.