தூத்துக்குடி வி.இ சாலையில் அமைந்துள்ள திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் 111வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் முன்னாள் மாணவர் தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் முன்னாள் மாணவர் வக்கீல் விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பேசுகையில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், அரசின் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் ,பள்ளி இடைநிற்றல் தடுத்தல், குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098 , போக்சோ சட்டம் மற்றும் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பிற்கான No – Go-Tell வழிமுறைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 700க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பள்ளிக் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி காட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி ரீட்டா , பள்ளி நிர்வாகி அருட்சகோதரி மலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.