இரண்டாம் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் ரூ.262 கோடியிலிருந்து ரூ.274 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தொடர்ந்து 100 வருடங்க ளுக்கும் மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது. 543 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
மதுரையில் நடை பெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2023-&24 இரண்டாம் காலாண்டு நிதிநிலை தணிக்கை செய்யப்படாத முடிவுகள் இறுதி செய்யப்பட்டது.
வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தணிக்கை செய்யப்படாத இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார்.
பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். செயல் திறனின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
நிகரமதிப்பு (Networth) ரூ.6,461 கோடியிலிருந்து ரூ.7,384 கோடியாக உயர்ந் துள்ளது. பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.408 கோடியிலிருந்து ரூ.466 கோடியாக உயர்ந்துள்ளது.
நிகர இலாபம் ரூ.262 கோடியிலிருந்து ரூ.274 கோடியாக உயர்ந்துள்ளது. RAM (சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத் தர நிறுவனங்கள் கடன் தொகை 87 சதவீதத் திலிருந்து 91 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மொத்த வருமானம் ரூ.1141 கோடியிலிருந்து ரூ.1,365 கோடியாக உயர்ந்துள்ளது. SMA கணக்குகள், கடன் தொகையில் 12.42% இருந்து 5.59% ஆக குறைந் துள்ளது. 2023-24 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 9.07% வளர்ச்சியடைந்து ரூ.85,092 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ.47,314 கோடி மற்றும் கடன் தொகை ரூ.37,778 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.
வங்கியானது விவசா யம், சிறு குறு தொழில் கடன், வியாபாரக் கடன், வீட்டுக்கடன் மற்றும் கல் விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கி யத்துவம் கொடுத்து வருகிறது.
2023-24 இரண்டாம் காலாண்டில் முன் னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.25,079 கோடி யில் இருந்து ரூ.28,198 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 12.44% ஆகும்.
முன்னுரிமைத் துறைக ளுக்கான கடன்கள் பார்த ரிசர்வ் வங்கி நிர்ண யித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 75% என்ற விகிதத்தில் உள்ளது. விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.12,752 கோடியாக உள்ளது.
விவசாயத் துறைக்கு நிர் ணயிக்கப்பட்ட அளவு மொத்த கடன்களில் 18% சதவிகிதம் மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 33.76% கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகுறு துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.12,690 கோடி யில் இருந்து ரூ.13,132 கோடியாக உயர்ந்துள்ளது. வைப்புத் தொகை ரூ.43,137 கோடியில் இருந்து ரூ.47,314 கோடி யாக உயர்ந்துள்ளது. கடன் தொகை ரூ.34,877 கோடியிலிருந்து ரூ.37,778 கோடியாக உயர்ந்துள்ளது.
இது 8.32% வளர்ச்சியை எட்டியுள்ளது. நிகர இலாபம் ரூ.274 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.262 கோடி யாக இருந்தது. இது 4.58% வளர்ச்சியடைந்துள்ளது.
நிகர வட்டி வருமானம் ரூ.533 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.509 கோடியாக இருந்தது.) இது 4.72% வளர்ச்சியடைந்துள்ளது.
ROA – 1.89% மற்றும் ROE-15.01 % முறையே, (முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.03% மற்றும் 17.65% ஆகவும் மற்றும் நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 1.85% மற்றும் 14.80% ஆகவும் இருந்தது)
நிகரமதிப்பு (Networth) ரூ.7,384 கோடியாக உயர்ந் துள்ளது. (முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.6,461 கோடியாக இருந்துத) இது ரூ.923 கோடி உயர்ந்து 14.29 % வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த காலாண்டில் 5 புதிய கிளைகள் துவக்கபட்டுள்ளது. வளர்ந்து வரும் MSME சந்தை வணிகத்தை ஈர்க்க, MSME கடன் செயலாக்க மையம் பெங்களுரு, ஹைதராபாத், திருச்சி மற்றும் சேலத்தில் துவக்கபட்டுள்ளது.
கடன் வழங்குதலை தன்னியக்கம் ஆக்குதலின் ஒரு பகுதியாக JOCATA Financial Advisory & Technology உடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது