இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் மாதம் தற்போது நடைபெற்று வருவதால் ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஆங்காங்கே உள்ள மசூதிகளில் அரசியல் கட்சியினரும் தன்னார்வ அமைப்புகளும் இப்தார் விருந்து வைத்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக திருச் செங்கோடு பெரிய பள்ளிவாசல் எனப்படும் ஜாமியா பள்ளிவாசலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் இராசை ஜெ.ஜெ.செந்தில்நாதன் அதிகாலை தொடங்கி நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருந்து இப்தார் விருந்தில் பங்கேற்றார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளரோடு தமிழக வெற்றிக்கழக இளைஞரணி மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலரும் நோன்பு இருந்தனர். இந்த இப்தார் விருந்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விருந்துக்கு முன்னதாக உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை த.வெ.க திருச்செங்கோடு நகர இளைஞரணி தலைவர் இப்ராஹிம் ஏற் பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் என பலரும் கலந்து கொண்ட னர்.