fbpx
Homeபிற செய்திகள்மாணவ, மாணவிகள் கற்றல் திறன் மேம்படுத்த கோவையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய ‘யூ-ஜீனியஸ்...

மாணவ, மாணவிகள் கற்றல் திறன் மேம்படுத்த கோவையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய ‘யூ-ஜீனியஸ் 3.0’ வினாடிவினா போட்டி

வங்கி சேவைகளில் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சமூக பங்களிப்பிலும் தனி அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அகில இந்திய அளவில் தேசிய பொது விழிப்புணர்வு வினாடி வினா போட்டியை யூ-ஜீனியஸ் 3.0 என்ற தலைப்பில் நடத்தி வருகிறது.

இதன் கோவை நகரம் மற்றும் மண்டல இறுதிச்சுற்றுப் போட்டிகள், இந்துஸ்தான் கலை மற் றும் அறிவியல் கல்லூரி பாரதியார் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதனை வங்கியின் மண்டலத் தலைவர் (சென்னை) சத்யபன் பெஹரா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பொது அறிவு, பொது விழிப்புணர்வு, வங்கி மற்றும் நிதி ஆகிய தலைப்புகளில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர்.

இறுதியில் வெற்றி பெற்ற இரண்டு அணியினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற அணியினர் மும்பையில் நடைபெற உள்ள கிராண்ட் ஃபைனலில் கலந்து கொள்ள உள்ளதாகவும், இறுதி போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையுடன் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என வங்கியின் மண்டலத் தலைவர் (சென்னை) சத்யபன் பெஹரா தெரிவித்தார்.

முன்னதாக நடை பெற்ற பரிசு வழங்கும் விழாவில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பிராந்திய தலைவர்கள் எஸ்.எஸ்.லாவண்யா (கோவை), எம்.செல்லதுரை (திருப்பூர்), பி.எம்.செந்தில்குமார் (சேலம்) மற்றும் கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் அசோக்குமார், வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவன இயக்குனர் சி.குண்ணி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img