fbpx
Homeபிற செய்திகள்24-25 நிதியாண்டு 2ம் காலாண்டு நிதிநிலை அறிக்கை: யூகோ வங்கி நிகர லாபம் ரூ.625 கோடியில்...

24-25 நிதியாண்டு 2ம் காலாண்டு நிதிநிலை அறிக்கை: யூகோ வங்கி நிகர லாபம் ரூ.625 கோடியில் இருந்து ரூ.1154 கோடியாக உயர்ந்தது

யூகோ வங்கியின் ஆண்டுக் காண்டு வணிகம் 30-9-2023 அன்று 417,145 கோடியில் இருந்து 30-9-24 அன்று ரூ.473704 கோடியாக 13.56 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே ஆண்டில் மொத்த வைப்புத் தொகை 30-9-23 அன்று ரூ.249411 கோடியில் இருந்து 10.57 சதவீதம் அதிகரித்து ரூ.275777 கோடியாகவும் மொத்தம் வழங்கிய முன்பணம் 30-9-23 அன்று ரூ.167734ல் இருந்து 18 சதவீதம் வளர்ச்சி கண்டு 197927 கோடி யாகவும் உள்ளது.

சில்லறை, வேளாண்மை மற்றும் சிறுகுறு நடுத்தர வணி கம் 30-9-23 அன்று ரூ.90046 கோடியில் இருந்து 20.16 சதவீதம் அதிக வளர்ச்சி பெற்று 30-9-24 அன்று ரூ.108200 கோடியாக அதிகரித்துள்ளது.

இதே பருவத்தில் சில்லரை முன் பணங்கள் 29.36 சதவீத வளர்ச்சியும் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் பிரிவு முறையே 18.98 சதவீதம் மற்றும் 38.66 சதவீதமும் அதிகரித்துள்ளது.

30-9-24 அன்று முடிவடையும் காலாண்டின் இயக்க லாபம் முந்தைய இதே காலாண்டில் ரூ.982 கோடியில் இருந்து ரூ.1432 கோடியாக 45 சதவீதம் அபார வளர்ச்சி கண்டுள்ளது. இது செப்டம்பர் 23 உடன் முடிந்த அரையாண்டில் ரூ.2154 கோடியில் இருந்து ரூ.2763 கோடியாக 26 சதவீதம் அதிகரித்துள்ளது.

நிகர லாபம் 23 செப்டம்பர் அரையாண்டில் ரூ.625 கோடியில் இருந்து ரூ.1154 கோடியாக ஆண்டுக்காண்டு 84.64 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல நிகர வட்டி வருமானமும் 30-9-24 முடிய உள்ள காலாண்டுக்கு சென்ற ஆண்டை ஒப்பிடும்போது 20.03 சதவீதம் அதிகரித்துள்ளது.

சொத்தின் தரத்தைப் பொறுத்து மொத்த வாராக்கடன் 30-9-23 அன்று 4.14 சதவீதத்தில் இருந்து 3.16 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நிகர வாராக்கடன் 1.11 சதவீதத்தில் இருந்து 30-9-24 அன்று 38 அடிப்படை புள்ளிகள் குறைந்து 38 புள்ளிகள் அபிவிருத்தி காணப்பட்டுள்ளது.

வங்கியின் 3247 உள்ளூர் கிளைகளில் 2 ஆயிரம் கிளைகள் கிராமப்புறம் மற்றும் வளரும் நகரப் பகுதிகளில் உள்ளன. 3-9-24 அன்றைய நிலவரப்படி வங்கிக்கு 2472 ஏடிஎம் மையங்கள் உள்ளன.

படிக்க வேண்டும்

spot_img