கோவை உக்கடம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் மற்றும் தனியார் கட்டடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேறும் இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
மேலும், போக்குவரத்தை சுலபமாக்க நெடுஞ்சாலைத்துறைக்கு தேவைப்படுவதால் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள 30 கடைகள் கொண்ட வணிக வளாகம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.
மேம்பால கட்டுமான பணிகள் முழுவதும் முடியும் போது உக்கடம் புது வடிவம் பெற்றிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.