fbpx
Homeபிற செய்திகள்மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது மத்திய அமைச்சர் முருகன்...

மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

மத்திய பாஜக அரசின் கீழ் கடந்த பத்தாண்டுகளாக எந்த சாதனையும் நிகழ்த்தப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை திட்டவட்டமாக மத்திய செய்தி விளம்பரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மறுத்துள்ளார்.

ஈரோட்டில் இருந்து நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று அந்த ரயிலை ஈரோடு ரயில்வே நிலையத்தில்கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூபாய் 11 லட்சம் கோடி அளவிலான வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் விமான நிலையங்கள் நான்கு வந்தே பாரத் ரயில்கள் மேம்பாலங்கள் சாலைகள் ஏழைகளுக்கான வீடுகள் கழிப்பிடங்கள் குடிநீர் வசதி விவசாயிகளுக்கான ரூபாய் 6000 ஆண்டுதோறும் மானியம் என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

கடந்த காங்கிரஸ் திமுக கூட்டணி 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 800 கோடி ஒதுக்கியது. ஆனால் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் தமிழகத்தில் மட்டும் சென்னை எக்மோர் காட்பாடி கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை கோவை சேலம் போன்ற ரயில் நிலையங்கள் அடங்கும். ரயில் பாதை நூறு சதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது ஈரோடு ரயில்வே நிலையம் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது.

ஈரோடு&நெல்லை எக்ஸ்பிரஸ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கோட்டை வரை தற்போது நீடிக்கப்படுகிறது. அம்பாசமுத்திரம் சேரன்மாதேவி தென்காசி செல்லவும் அங்கிருந்து ஈரோடு வந்து ஜோலார்பேட்டை சென்னை செல்லவும் இது பெரிதும் வசதியாக இருக்கும்.தமிழகத்தில் சென்னை -நெல்லை, சென்னை – பெங்களூர், ஈரோடு -பெங்களூர், சென்னை- கோவை வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


இது உள்நா ட்டிலேயே நமது பெரம்பூர் ஐசிஎப் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரயில்வே துறையில் ஒரு புரட்சி நடந்து கொண்டிருக்கிறது 2047க்குள் இந்தியா ஒரு வளர்ந்த தேசமாக வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img