fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் செய்தியாளர்கள் பயணத்தின் போது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நல வாழ்வு மையத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ்...

திருப்பூர் செய்தியாளர்கள் பயணத்தின் போது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நல வாழ்வு மையத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு

மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், நேற்று (30ம் தேதி) திருப்பூர் மாநகராட்சி, டி.எஸ்.கே. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நல வாழ்வு மையத்தினை செய்தியாளர்கள் பயனத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த செய்தியாளர்கள் பயணத்தின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் அனைத்து விதமான மருத்துவச் சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம், திருப்பூர் மாநகராட்சி, டி.எஸ்.கே. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நல வாழ்வு மையத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஒரு மாவட்ட அரசு மருத்துவமனை, 8 அரசு மருத்துவமனைகள், 67 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 21 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 341 துணை சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரால் மருத்துவத்துறையில் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவ த்திட்டம், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், மகப்பேறு சத்துணவு பெட்டகம் வழங்கும் திட்டம், தாய் சேய் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம், சானிடரி நேப்கின் வழங்கும் திட்டம், குடல்புழு நீக்கம் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையம் என்பவை அனைவருக்கும் சுகாதாரம் என்ற இலக்கை அடைய அரசு மக்களுக்காக ஏற்படுத்திய ஒரு திட்டமாகும். இதில் வட்டார அளவில் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையஙகள் செயல்பட்டு வருகிறது. இதில் அவசர முதலுதவி சிகிச்சைகள்,பேறுகால மற்றும் பிரசவ கால சேவைகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண் களுக்கான தடுப்பூசி திட்டங்கள், குடும்ப நல திட்டங்களை செயல்படு த்துதல், தொற்று நோய்கள் ஏற்படுவதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ சேவைகள் சரியான இடங்களில் சென்றடைய தற்பொழுது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து இந்த சேவைகள் அனைத்தும் நகர்ப்புற மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஆரம்ப சுகாதார நிலைய சேவைகளை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம், திருப்பூர் மாநகராட்சி டி.எஸ்.கே. நகர்ப்புற ஆரம்க சுகாதார நல வாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நல வாழ்வு மையத்தில் நாளொன்றுக்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நல வாழ்வு மையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையிலும், 10 படுக்கை வசதிகள் கொண்ட நல வாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மருத்துவம், பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், தோல் மருத்துவம், மன நல மருத்துவம் போன்ற மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலை வர் கிறிஸ்துராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய அலுவல நவீன்குமார் மற்றும் மருத்துவர்கள். செவிலியர்கள் மற்றும் செய்தியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவ லர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img