கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியில் உள்ள நல்லாசிரியர் சீனிவாசன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனர் முனைவர் சீனித் திருமால் முருகன் தலைமை தாங்கினார், கல்லூரியின் செயலர் முனைவர் ஷோபா திருமால் முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் பாதுகாப்பு துறை விஞ்ஞானி டாக்டர் டில்லிபாபு கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அவர் பேசுகையில், அறிவியல் விஞ்ஞானிகளின் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதியமான் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ராமலட்சுமி, மற்றும் கல்லூரியில் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 1300க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.