fbpx
Homeபிற செய்திகள்கரூர் மாவட்டத்தில் “உயர்வுக்குப் படி” நிகழ்ச்சி மூலம் 588 - மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை: மாவட்ட...

கரூர் மாவட்டத்தில் “உயர்வுக்குப் படி” நிகழ்ச்சி மூலம் 588 – மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை: மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல்

கரூர் தாந்தோணி அரசு கலை கல்லூரியில் கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 2 ஆம் கட்டமாக “உயர்வுக்குப் படி” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது வாழ்க் கையிலும் வெற்றியாளர் ஆகும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய நான் முதல்வன் என்கிற புதுமைத் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக “உயர்வுக்குப் படி” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக “உயர்வுக்குப் படி” எனும் நிகழ்ச்சி வருவாய் கோட்டம் வாரியாக 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

முதற்கட்டமாக, கடந்த 09.09.2024 அன்று கரூர் வருவாய் கோட்டத்திற்குட்டப்பட்ட அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்கான “உயர்வுக்குப் படி” நிகழ்ச்சியின் மூலம் 370 மாணக்கர்களும், குளித்தலை கோட்டத்தில் கடந்த 13.09.2024 அன்று நிகழ்ச்சி நடத்தப்பட்டு 68 மாணக்கர்களும், அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இன்று 19.09.2024 கரூர் கோட்டத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி மூலம் 16 மாணக்கர்கள் என மொத்தம் 588 மாணக் கர்களுக்கு உயர்கல்வி பயில சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பொருளாதார சூழ்நிலை, கல்விக்கடன், கலந்தாய்வு பல்வேறு காரணங்களால் உயர் கல்வியில் இணைந்து படிக்க இயலாத மாணவர்களின் விவரங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு, இன்றைய தினம் முன்றாம் கட்ட இந்நிகழ்ச் சியின் வாயிலாக அவர்களு க்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் கல்விக் கடன் தேவைப்படும் மாணவ,
மாணவி களுக்கு உதவிடும் வகையில் வங்கிகள் மூலம் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, உயர்கல்வியில் உள்ள பிரிவுகள், வேலைவாய் ப்புகள் மற்றும் அதன் முக்கியத்துவங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

மாணவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் வழங்குவதற்காக வருவாய் த்துறை சார்பில் இ-சேவை அரங்குகள், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணக்கர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இயக்குனரகம் திருச்சி மண்டல இணை இயக்குநர் பொன் முத்துராமலிங்கம், கல்லூரி முதல்வர் முனைவர். அலக்சென்டர், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமதுபைசல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சண்முக வடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள், உதவி இயக்குநர் (பயிற்சி) விஜய், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஜோதி உள்ளிட்ட தொடர்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img