fbpx
Homeபிற செய்திகள்வல்லகம் அறக்கட்டளை உதவித்தொகை பெற்ற கோவை மாணவர்கள்

வல்லகம் அறக்கட்டளை உதவித்தொகை பெற்ற கோவை மாணவர்கள்

வல்லகம் அறக்கட்டளை தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களை மேம்படுத்துவதற்கான உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்ப டுத்தியுள்ளது.
இந்நிலையில் வல்லகம் அறக்கட்டளை அதன் உதவித்தொகை திட்டம் 2024 இன் பெறுநர்களை அறிவித்துள்ளது.

தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப்-ஸ்டிராடஜிஸ்ட் கிறிஸ்டோபர் சற்குணம் என்பவரால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, சமூகத்தை மேம்படுத்த செயல்பட்டு வருகிறது.

இந்த வல்லகம் உதவி தொகைத்திட்டம், தேவைப் படும் மாணவர்களுக்கு நிதி உதவி மட்டுமல்ல வாய்ப்புக் கான பாலமாகவும், கல்வியின் உருமாறும் சக்தியாகவும் உள் ளது. இது குறித்து வல்லகம் அறக்கட்டளையின் நிறுவனர் கிறிஸ் டோபர் சற்குணம் கூறுகையில், “பெரிய கனவு காணவும், பெரிய விஷயங் களைச் சாதிக்கவும் இது மற்றவர்களை ஊக்குவிக்கும் என்றார்.கோயம்புத்தூரில் ஆரம்பித்த இந்த சேவை விரைவில் தமிழகம் முழுவதும் விரிவடைந்து வருகிறது.

இந்த குழுவில் ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் செலீன் வினோதினி, விவேக் ஜெயின், முன்னணி பட்டய கணக்காளர் நாராயணன், ஓய்வு பெற்ற நிர்வாகி எபினேசர் மணி, ஓய்வு பெற்ற அருட்தந்தையர் சதி சற்குணம் உள்ளனர்.

2024 ஸ்காலர்ஷிப் பெறுபவர்களின் விவரம்: கோயம்புத்தூரைச் சேர்ந்த கிஷோர் முரளிதரன் திரைப்பட இயக்குநராக சேர புகைப்படம் மற்றும் வீடியோகிராபி படிப்பில் சேர்ந்துள்ளார். திருச்சியில் வசிக்கும் அனந்த் முரளிதரன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பின் மூலம் தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்த முயல்கிறார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராம் இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர், பட்டப்படிப்பை முடிக்க ஆதரவு தேவையை பெற்றுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img