சேலம் அம்மா பேட்டையில் செயல்பட்டு வந்த வாசன் கண் மருத்துவமனை பொதுமக்களின் வசதிக்கேற்ப அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய அதிநவீன மருத் துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனர் கமல் பாபு கலந்து கொண்டு புதிய அறுவை சிகிச்சை அரங்கினை திறந்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செல்வகுமாரி, செந்தா மரை செல்வி, குமாரநந்தா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். மருத்துவமனை இயக்குனர் சுந்தர முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பான் இந்தியா தலைவர் பானு பிரதாப் சிங், மண்டல மேலாளர் வெங்கடேஷ் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல மேலாளர் செல்வம் செய்திருந்தார்.