fbpx
Homeபிற செய்திகள்வீராணம் ஏரி ரூ.66 கோடியில் மேம்படுத்தப்படுகிறது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

வீராணம் ஏரி ரூ.66 கோடியில் மேம்படுத்தப்படுகிறது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கடலூர் மாவட்டம், கொள்ளிடம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட வீராணம் ஏரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட் சித்தலைவர் கூறியதாவது:
சிதம்பரம், கொள்ளிடம் வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட வீராணம் ஏரியானது 11 கி.மீ நீளமும், 4 கி.மீ அகலமும் கொண் டது. வீராணம் ஏரியானது 47.50 அடி கொள்ளளவு கொண்டதாகும்.

இந்த ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், குமராட்சி வட் டங்களை சேர்ந்த 48,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், அதனைச் சுற்றி 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்ற வருகிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஏரிக்கு காவிரியின் கொள்ளிடத்திலுள்ள கீழணையிலிருந்து வடவாறு வழியாகவும், பருவகால மழை மூலமாகவும், நீர் வரத்து இருக்கும். தற்போது இந்த ஏரிக்கான நீர்வரத்து வாய்க்கால்கள் அடர்ந்த முட்செடிகளாகவும், புதர்களாகவும் உள்ளதால் நீர்வ ரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஏரியில் 1.22 டி.எம்.சி தண்ணீர் தேக்கப்பட்ட நிலையில் தற் போதைய சூழ்நிலையில் 0.90 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்கும் சூழ்நிலை உள்ளது.

மேலும், மழைக்காலங்களில் செங்கால் ஒடை, பாப்பாக்குடி ஓடை, ஆண்டிப்பாளையம், வாய்க்கால் ஏரி மூலமாக 30,000 கனஅடி நீர்வரத்து ஏற் படும். அவசர காலங்களில் 23,000 கனஅடி தண்ணீரை மட்டுமே வெளியேற்றும் நிலை உள்ளது. மழைக்காலத்தில் நீர் வரத்து அதிகரிப்பதனாலும், வாய்க்கால்களில் தண்ணீர் வெளியேற்றும் அளவு குறைவாக இருப்பதனாலும் அசாதாரண மான சூழ்நிலை ஏற்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் இதனை கருத்தில்கொண்டு, வீராணம் ஏரியிலிருந்து பகுதிகளான வெள்ளியங்கால் ஓடை, மண வாய்க்கால், பாழவாய்க் கால் ஆகிய மூன்று பெரிய வாய்க்கால்களை தூர் வாரி, அகலப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி புனரமைப்பு மேற்கொள்ளும் வகையில் ரூ.63.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

இதன் மூலம் ஏரியிலுள்ள பழுதடைந்த பாசன வாய்க்கால்கள், மதகுகள் புனர மைக்கும் பணிகளும், இதன் மூலம் 7,500 கனஅடி வெள்ளநீர் வெளியேற்றும் வகையில் பூதங்குடி கிராமத்தில் உள்ள புதிய உபரிநீர் ஒழுங்கியத்தில் கூடுதலாக 5 நீர்ப்போக்கிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


மேலும், கனிம வள நிதியிலிருந்து 4.6 கோடி மதிப்பீட்டில் வடவாற்றின் குறுக்கே ஒழுங்கியம் அமைத்து 11 பாசன மதகுகள் மூலம் 4,038 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் மூலம் வெள்ளப்பாதிப் புகள் குறைவதுடன் கூடுதலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு வழிவகை ஏற்படுத் தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, செயற்பொறியாளர் (கொள்ளிடம் வடிநிலக் கோட்டம்) காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், கொளஞ்சிநாதன், உதவிபொறியாளர் சிவராஜ், வட் டாட்சியர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img