fbpx
Homeபிற செய்திகள்தீக்காயம், பக்கவாத சிகிச்சை மையங்கள் விரைவில் நறுவீ மருத்துவமனையில் துவக்கம்

தீக்காயம், பக்கவாத சிகிச்சை மையங்கள் விரைவில் நறுவீ மருத்துவமனையில் துவக்கம்

வேலூர் நறுவீ மருத்துவமனையில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கும் சிகிச்சை அளிக்க புதியதாக இரண்டு சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக இம்மருத்தும வனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை நுரையீரல் மகப்பேறு மருத்துவம் சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு குடல் நோய் சிகிச்சை மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இதுவரையிலும் இருதய நோயால் பாதிக்கப்பட்ட 2500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இரைப்பை குடல் நோயால் பாதிக்கப்பட்ட 8500-க்கும் மேற்ப்பட்ட நோயாளிகளுக்கு எண்டோஸ் கோபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ரத்தப்புற்று நோய் மற்றும் எலும்பு மஜ்ஜை சிகிச்சையில் இந்தியாவில் புகழ்பெற்ற டாக்டர் மாமன் சாண்டி தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை, இந்தியாவில் முதன் முதலில் செய்தவர் இவர்தான்.

தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்புப் பிரிவும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசின் அனுமதி பெறப்பட்டுள் ளது என்றார்.

பேட்டியின் போது மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத் செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் திலிப் மத்தாய் பொது மருத்து வத்துறை தலைவர் டாக்டர் குரியன் தாமஸ் தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img