வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத், அனிதா சம்பத் தம்பதியரின் மகன் நிதின் சம்பத்திற்கும், சென்னை அடையாறு ஆனந்த பவன் குழும நிர்வாக இயக்குநர் கே.டி வெங்கடேசன் -லலிதா வெங்கடேசன் தம்பதியரின் மகள் அபிராமிக்கும் சென்னையை அடுத்த நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் அண்மையில் திருமணம் நடைபெற்றது.
விழாவையொட்டி வேலூர் பகு தியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதி யோர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் கந்தனேரி பகுதியில் அமைந்துள்ள நறுவி கன்வென்ஷன் சென்டரில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சச்சின் இசை குழுவினரின் புல்லாங்குழல் மற்றும் வீணை கச்சேரி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் அமைந்துள்ள நம்பிக்கை இல்லம், கசம் முதியோர், பாலர் குடும்ப கிராம பண்ணை, தாராபடவேடு ஆத்ம சாந்தி முதியோர் இல்லம் உள்ளிட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் என 600க்கும் மேற்பட்டவர்களுக்கு இனிப்புடன் கூடிய அறு சுவை உணவு மற்றும் பரிசு பொருட்களை நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் வழங்கினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை குடும்பத்தார் வரவேற்று சிறப்பித்தனர்.