வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பல்கலைக் கழக தின விழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். பதிவாளர் ஜெயபாரதி வரவேற்றார். துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது; 1984ல் உருவான வி.ஐ.டி. இன்று வளர்ந்து ஆலமரமாக திகழ்கிறது. பல்கலைக்கழகம் 40 வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
ஒரு மனிதரால் தான் இது சாத்தியமானது. அவர் தான் உங்கள் வேந்தர் விசுவநாதன். அவருடைய தொலைநோக்குப் பார்வை யால் பல மாணவர்களுக்கு கல்வி கிடைக்கிறது. அவர் லயோலா கல்லூரியில் படிக்கும் போது விடுமுறை எடுக்காமல் படித்துள்ளார். அதைப்போல மாணவர்களும், ஆசிரியர்களும் 100 சதவீதம் வருகையை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் மூன்று வகைப்படுவார்கள். முதல் வகை மாணவர்கள் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு கல்வி கற்பதை தவிர பிற செயல்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் பெரிய தொழிலதிபராக உருவெடுக்கிறார்கள். இரண் டாவது வகை கடினமாக உழைப்பார்கள். புத்தகத்தில் உள்ள அனைத்தையும் படித்து மனப் பாடம் செய்வார்கள். அவர கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து டாக்டர் ஆகிவிடு வார்கள்.
மூன்றாவது வகை மாணவர்கள் மிகவும் சிறந்தவர்களாகவும், அறி வாளிகளாகவும் திகழ்ந்து என்ஜினீயர்களாக மாறுகின்றனர். பின்னர் அவர்கள் தொழிலதிபர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் மாறுகின்றனர். வாழ்க்கை விதவிதமான வாய்ப்புகளை நமக்கு கொடுக்கிறது.
கல்வி என்பது என்ன?. அறிவு, ஒழுக்கம் தான் அது. நமக்கு தெரியாத விஷயங்களை கற்றுக் கொடுப்பதுதான் கல்வி. விளையாட்டு என்பது கல்வியின் ஒரு அங்கம். தோல்விகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை விளையாட்டு கற்றுத் தருகிறது. கடின உழைப்பு மூலம் ஒரு விஷயத்தில் வெற்றி பெறுவது என்பதற்கு விளையாட்டு முக்கியமானது. விளையாட்டு மக்களை இணைக்கிறது. நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதை உள்ளன்போடு செய்ய வேண்டும்.
உங்களை நீங்கள் நம்ப வேண்டும். உங்களால் ஒரு விஷயத்தை அடைய முடியும் என்ற உறுதியோடும் கடின உழைப்போடும் மேற்கொண்டால் நீங்கள் விரும்பியதை அடைய முடியும். அதற்கான அடிப்படை கட்டமை ப்புகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வேந்தர் விஸ்வநாதனை நீங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், தேசிய மற்றும் சர்வதேச விளை யாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ரூ.1.4 கோடியில் 3400 மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
விழாவில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது;
வி.ஐ.டி பல்கலை கழகத்தின்ன் 40வது ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். 3400 மாணவர்களுக்கு ரூ.1.4 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதில் நூறு சதவீதம் வருகை தந்த 413 மாணவர்களுக்கு மற்றும் 9 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு ஆசிரியர்கள், மாணவர்களுடன் போட்டி போட வேண்டும். ஆசிரியர்களின் வருகை அவசியமானது அவர்கள் மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்.
1984 ஆம் ஆண்டு 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட வி.ஐ. டி. 15 ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டது. அப்போது ஒரு மாத ஊதியமாக அனைவருக்கும் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
இப்பொழுது ஒரு நாளைக்கு ரூ.1 கோடி செலவாகிறது. ஒரு மாதத்திற்கு ரூ.30 கோடி செலவாகிறது. இது பெற்றோர்களால் தான் சாத்தியமானது. அவர்கள் இல்லை என்றால் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்தியாவில் உயர்கல்வி 28 சதவீதத்தில் தான் உள்ளது.
உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்திலும், கேரளா இரண்டாவது இடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. அரசுகளும், அரசிய ல்வாதிகளும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் உயர்கல்விக்கு செலவிடப்படும் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அதனை உயர்த்தி வழங்க வேண்டும். வி.ஐ.டி வேலூர் வளாகத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும், 70 நாடு களை சேர்ந்த 50 மொழிகள் பேசும் 44 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் வி.ஐ.டி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக் குனர் சந்தியா பென்டா ரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ். விஸ்வநாதன், திருமதி. ரமணி பாலசுந்தரம், இணை துணை வேந்தர் பார்த்த சாரதி மல்லிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.