விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதனுக்கு, கொல் கத்தாவில் உள்ள் புனித சேவியர்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கல்வி, தலை மைத்துவம், பொது சேவை மற்றும் மனிதாபிமான முயற்சிகள் ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதற்கான பட்டமளிப்பு விழாவில் விஐடி வேந்தர் கோ. விசுவநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை புனித சேவியர்ஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர். ஜான் பெலிக்ஸ் ராஜ் வழங்கினார்.
பட்டமளிப்பு உரையை மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முகர்ஜி வழங்கினார்.
விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரண், இணை துணை வேந்தர் பார்த்த சாரதி மல்லிக், முன்னாள் மாணவர் நல இயக்குநர் எலிசபெத் ரூபஸ், கல்வியா ளர்கள், பிரமுகர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.