fbpx
Homeபிற செய்திகள்குறியீட்டு உதவியுடன் மரபணுக்களை ஒன்றிணைத்தல் பற்றிய பயிற்சிபட்டறை

குறியீட்டு உதவியுடன் மரபணுக்களை ஒன்றிணைத்தல் பற்றிய பயிற்சிபட்டறை

வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்திய அரசு இணைந்து “குறீயீட்டு உதவியுடன் மரபணுக்களை ஒன்றிணைத்தல் குறித்த இரண்டு நாட்கள் ஆசிரியப் பயிற்சி பட்டறை, கிள்ளிகுளம், வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 20 கல்லூரி பேராசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

இப்பயிற்சியை கிள்ளிகுளம், வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் மா.தேரடிமணி துவங்கி வைத்தார். மற்றும் பனைமரம் மற்றும் வாழை ஆராய்ச்சி நிலைய சிறப்பு அதிகாரி முனைவர் ஸ்வர்ண பிரியா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முனைவர் எஸ்.ஜூலியட் ஹெப்சிபா, பேராசிரியர் மற்றும் தலைவர் (பயிர் மரபியல் துறை) வரவேற்புரை ஆற்றினார். பங்கேற்பாளர்களுக்கு இத்தலைப்பிற்கேற்ற விரிவுரைகள், நடைமுறை அமர்வுகள் மற்றும் விவாதங்கள் என இப்பயிற்சிக் கூட்டம் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள ஒரு பயிற்சியாக வடிவமைக்கப்பட்டது.

இறுதியில் முனைவர்.எஸ்.சரவணன், இணை பேராசிரியர் (பயிர் பெருக்கம்) நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img