வால்வோ கார் இந்தியா, தனது முழு எலெக்ட்ரிக் XC40 Recharge காரின் விற்பனையை தொடங்கியது. வால்போ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (VOLVO XC40 Recharge) முதன்முதலாக இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட முழு எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யுவி ஆகும்.
இந்நிறுவனம் பெங்களூரில் அதிநவீன வசதிகளுடன் அமைந் துள்ள தொழிற்சாலையில் கார்களை அசெம்பிள் செய்து வருகிறது.
வால்வோ கார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், ஏறத்தாழ 500 கார்களுக்கான ஆர்டர் முன்கூட்டியே கிடைத்துள்ளது.
அவற்றில் 100 கார்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் டெலிவரி செய்யப்படும். மற்ற வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டு டெலிவரி செய்யப்படும்.
XC40 RECHARGE இந்த ஆண்டு ஜூலை 26-ல் ரூ.55.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் ஓனர்ஷிப் பேக்கேஜுடன் அறிமுகப் படுத்தப்பட்டது.
ஆன்லைன் புக்கிங்
ஜூலை 27-ல் ஆன்லைன் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 150 கார்கள் புக்கிங் செய்யப்பட்டு, வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி காரானது இந்தியாவில் சொகுசு கார்களை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
XC40 RECHARGE காரை ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க முடியும். இந்த சிறப்பம்சம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றியுள்ளது.
அனைத்து Volvo XC40 Recharge கார் உரிமையாளர்களும் பிரத்யேக Tre Kronor Program-ன் மெம்பெர்ஷிப்-ஐ பெறுவார்கள். Volvo XC40 Recharge கார் உரிமையாளர்களின் மனத்திருப்தி மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு, பிரத்யேக சலுகைகள், சேவைகள் இந்த மெம்பெர்ஷிப்பில் வழங்கப்படுகிறது என்றார்.
இந்நிறுவனம் வரும் 2030ம் ஆண்டிற்குள், ஹைபிரிட் கார் உட்பட எரிபொருள் மூலம் இயங்கும் கார்களின் உற்பத்தியை குறைத்து விட்டு முழு எலெக்ட்ரிக் கார்களை வழங்கவுள்ளது.
இத்திட்டம் தொடர் நடவடிக்கைகள் மூலமாக ஒரு கார் வெளியிடும் CARBON FOOTPRINT சுழற்சியை குறைக்கும் நோக்கத்தோடு, நிறுவனத்தின் உலகளாவிய கால நிலை மாறுபாடு திட்டத்துடன் இணைந்ததாகும்.