fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் வந்தடைந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி சீல் வைப்பு

மேட்டுப்பாளையம் வந்தடைந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி சீல் வைப்பு

தமிழகத்தில் வரும் ஏப்.19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக 388 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 420 விவிபேட் இயந்திரங்கள் கோவை மாவட்ட தேர்தல் பாதுகாப்பு அறையில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்ட இரு லாரிகளில் ஏற்றப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டன. பின்னர்,சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து திமுக, அதிமுக,பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரன்,தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மேற்பார்வையில் கண்டெய்னர் லாரிகளில் இருந்து வாக்கு பதிவு இயந்திரங்கள் இறக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு கல்லூரியின் பாதுகாப்பு அறையில் இயந்திரங்கள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும்,வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பபட்டுள்ள அறை,வெளிப்புற மற்றும் உட்புற அறைகளை சுற்றிலும் 15 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மானிட்டர் மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img