தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரி ஊராட்சி, ஏலகிரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கும் தருமபுரி சட் டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமிபூஜை செய்து, பணியை தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பாமக மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மணி, துணை தலைவர் தேவசுந்தரிநாகலிங்கம், வார்டு உறுப்பினர் முனுசாமி, நிர்வாகிகள் ராஜவேல், ஆறுமுகம், காமராஜ், தங்கராஜ், பாபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.