கேரள மாநிலம் வயநாடில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இது வரை 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயநாட்டில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்துறையினர், மீட்பு பணித்துறையினருக்கு பல் வேறு மாநிலங் களில் இருந்தும் உதவி கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலிருந் தும் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி முதலமைச்சரின் ஆணைக் கிணங்க வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோவை மாவட்டம் சார்பில் மீட்பு பணிகளுக்காக மீட்பு வாகனங்கள் குளிர் பெட்டிகள் ஆகியவை அனுப்பி வைக்கப் பட்டது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் உட்பட மாநக ராட்சி அலுவலர்கள் இந்த மீட்பு பணி பொருட்களை அனுப்பி வைத்தனர்.