fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

சிதம்பரத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

சிதம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் 36 நபர்களுக்கு ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

பேராசிரியர் ஞானகுமார் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சுதீர்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

பேராசிரியர் லதா வாகனப் புகையினால் ஏற் படும் தீங்குகளை குறித்தும் அதை எப்படி தடுப்பது குறித்தும் பேசினார்.முடிவில் கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.விழாவில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் செந்தில்நாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img