fbpx
Homeபிற செய்திகள்தேனியில் 500 பேருக்கு நலஉதவிகளை வழங்கிய மாவட்ட தமிழக வெற்றி கழகம்

தேனியில் 500 பேருக்கு நலஉதவிகளை வழங்கிய மாவட்ட தமிழக வெற்றி கழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு சுமார் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியில் நடைபெற்றது

தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள், ஏழை எளிய பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற் பட்ட மக்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு 3.5 லட்சம் மதிப்பீட்டில் அரிசி, வேஷ்டி, சேலை மற்றும் இனிப்புகளுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

பின்னர் கட்சியின் கொள்கைகள் அடங்கிய புத்தகத்தை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு கட்சியின் கொள்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

இந்த புது வருடத்தில் இனி மக்களின் பிரச்சனைக்காக போராட்டங்கள் மற் றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடத்துவோம் என்றும் தேனி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்தனர்

தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் அணி தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தேனி மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் ராஜ சீராளன், ஈஸ்வரன், செல்ல கருப்பன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img