fbpx
Homeபிற செய்திகள்ஆக்கிரமிப்பு காஷ்மீரை இதுவரை மீட்காதது ஏன்?

ஆக்கிரமிப்பு காஷ்மீரை இதுவரை மீட்காதது ஏன்?

உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய அமித் ஷா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. அது எப்போதும் இந்தியாவுக்குச் சொந்தமானதாகவே இருக்கும். நாங்கள் அதனை மீட்போம்“ என்று பேசி இருக்கிறார்.

அது சரி; கடந்த பத்தாண்டு காலமாக பாஜக தானே ஆட்சியில் இருக்கிறது. இதுவரை என்ன செய்தீர்கள்? இப்போதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றி உங்களுக்கு ஞாபகம் வந்ததா? வருகிறதா? பத்தாண்டு காலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க அந்த நாட்டின் மீது தொடுத்த யுத்தம் என்ன? யுத்தம் வேண்டாம்… பேச்சுவார்த்தைகளாவது நடத்தப்பட்டதா? ஐக்கிய நாடுகள் சபையில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டதா? பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏதாவது கொடுக்கப்பட்டதா?

காஷ்மீரை ஆக்கிரமித்தது வல்லரசு நாடுகளான அமெரிக்காவோ, சீனாவோ அல்ல. மிகமிகச் சிறிய நாடான பாகிஸ்தான். 10 ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு, தேர்தல் முடிவுகள் வர ஒரு வாரமே இருக்கும் நிலையில் அமித்ஷா இப்படிச் சொல்வது 7 வது கட்டத் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமாகத் தான் இருக்க முடியுமே தவிர வேறென்ன?

தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைத்தாலும் சரி, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டே ஆக வேண்டும். ஏனென்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிற்குத் தான் சொந்தம். இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.
அந்த நிலப்பகுதி எப்போது நமக்குச் சொந்தமாகுமோ அந்த நாளே இந்தியாவின் வெற்றித் திருநாளாக அமையும்!

படிக்க வேண்டும்

spot_img