கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனமானது, ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினத்தன்று சிறந்த 100 மகளிர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சிங்கப் பெண் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில், 7ம் ஆண்டாக கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் மற்றும் கோவை கற்பகம் உயர் கல்விக் கழகம் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
கோவை கற்பகம் கலையரங்கில் நடைபெற்ற, இவ்விழாவில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு துறை சார்ந்த ஆளுமை மகளிர்கள் 123 பேர் சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் ஆளுமை மகளிர்களுக்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருமதி. தமயந்தி வசந்தகுமார் விருதுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
Crest book of records -உலக சாதனை இணையதளத்தை கற்பகம் உயர் கல்விக்கழக துணைவேந்தர் முனைவர். பி.வெங்கடாஜலபதி தொடங்கி வைத்து வாழ்த்தி பேசி னார்.
இவ்விழாவில், கற்பகம் உயர் கல்விக் கழக பதிவாளர் எஸ்.ரவி, மாணவர்கள் நலஅதிகாரி பி.தமி ழரசி, பேராசிரியர் மற்றும் இயக்குனர், விரிவாக்க கல்வி இயக்குனர் ஏ.தர்மராஜ், கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய மேனாள் இயக்குனர் எல்.ஈஸ்வரமூர்த்தி, இந்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை மேனாள் பொது மேலாளர் வி.ராமநாதன், தருமபுரி லட்சுமி அம்மாள் -நஞ்சப்பக் கவுண்டர் நினைவு அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தென்னக ரயில்வே ஒப்பந்ததாரர் ந.பரமசிவம், பாரதியார் பல்கலைக்கழக பேரா சிரியை முனைவர் ஜி.பிரேமலதா, தருமபுரி ஸ்ரீ தேவிமகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இயக்குனர் தேவகி பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் களாக, ஏற்கனவே சிங்கப்பெண் விருது பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளர் கோவையைச் சேர்ந்த முனைவர் “வண்ணத்தமிழ்” சூர்யா, கோவையைச் சேர்ந்த தொழில் முனைவோர் எஸ்.காயத்ரி, உசிலம் பட்டி தொழில் முனைவோர் லஷ்மி பிரதீபா, ஆசிரியை முனைவர் ஜெ.மரியஷில்பா, சேலத்தைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சித்ரா கார்த்திகேயன், கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் தன்னார்வலர் ஈரோட்டைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணர் லீலாவதி தேவநாதன், தருமபுரி தொழில் முனைவோர் கற்பகவள்ளி ராமன், தேனி மாவட்டம் குள்ளப்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா தேவி செந்தில்குமரன், திருச்சி
தாய்நேசம் அறக்கட்டளை நிறுவனர் ஹெப்சி சத்திய ராக்கிணி, ஆகியோர் கலந்து கொண்டு, விருது பெற்ற மகளிருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
முன்னதாக திருச்சி தளிர் கலைக்குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், யோகா சாதனை நிகழ்வு ஆகியவை நடந்தது.
இறுதியில் கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் அமைப்பின் திட்டப் பிரிவு இயக்குனர் அன்பரசு ராமன் நன்றி கூறினார்.