உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருந்திய பதாகைகளுடன் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தாய்வழி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம், வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை விவசாயம், வேளாண்மை இயந்திரப் பயன்பாடு, மதிப்பபுக் கூட்டுதல், விதை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்தினர்.
இப்பேரணி விருத்தாச்சலம் உழவர் சந்தையிலிருந்து பெரியார் பேருந்து டிப்போ வரை சென்றது. இதில் ஊரக வேளாண் பணி அனுபவம் மேற்கொள்ள விருத்தாசலத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு வருகை புரிந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஜேஎஸ்ஏ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மற்றும் வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய கல்லூ ரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.