fbpx
Homeபிற செய்திகள்தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு நடைபயணம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு நடைபயணம்

இருதய நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் தஞ்சையில் உலக இருதய தின விழிப்புணர்வு நடைபயணம் இன்று காலை நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு கோயில் அருகில் உள்ள பிஷப் சுந்தரம் வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக். IPS, பிஷப் பள்ளி தாளாளர் அருட்தந்தை. s.வின்சென்ட் காடியாலஜி சொசைட்டி தமிழ் சாப்டர் தலைவர் டாக்டர் வி.முருகேசன், விநாயக மிஷின் டீன் டாக்டர் சி குணசேகரன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

மரபு ரீதியாக இந்திய மக்களுக்கு உடலில் நல்ல கொழுப்பின் அளவு குறைவாக உள்ளது. இதுவே இந்திய துணை கண்டத்தில் அதிக அளவில் இருதய நோய் பாதிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. இதைத் தடுப்பதற்கு தினமும் நடைப்பயிற்சி மிகவும் உதவும்.

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு நன்மை தரக்கூடிய நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம். மேலும் இரு தய நோய் வருவதையும் பெரும ளவு தடுக்கலாம். அனைத்து வயதினருக்கும் உடற்பயிற்சி மிகவும் உகந்தது. எனவே இருதய நலன் காக்க தினமும் நடைபயிற்சி அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த நடைபயணத்தில் ஆயிரத் துக்கு மேற்பட்ட பொதுமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். நகரின் பல்வேறு பகுதிகளின் வழியாக சென்ற நடை பயணம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது. நடை பயணத்திற்கான ஏற்பாடு களை தஞ்சை மீனாட்சி மருத்து வமனையின் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img