ஒவ்வொரு ஆண்டும் உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19ம் தேதி கொண்டாடப் படுகிறது. புகைப்படங்கள் நம் சந்தோஷங்களை, நினைவுகளை பதிவு செய்துகொள்ள உதவும் ஒரு கருவி.
நிகழ்காலத்தில் இருந்துகொண்டு நம் கடந்த கால நினைவுகளை இளைப்பாறலாம். கடந்த கால இன்பமான நினைவுக்கு மீண்டும், நாம்மை சில நொடிகள் கொண்டு சேர்க்க காரணமாகின்றன புகைப் படங்கள்.
உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19ம் தேதி கொண்டாடப் படுகிறது. லூயிஸ் டகுரே என் பவர் வளர்த்த புகைப்பட கலை கண்டுபிடித்ததை நினைவுகூறும் வகையில் உலக புகைப்பட தினம் 1837ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
புகைப் பட வரலாற்றில் இது ஒரு மை ல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் புகைப்பட கலை மற்றும் அறிவியலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.உலகம் முழுவதிலும் உள்ள புகைப் பட கலைஞர்கள் மற்றும் புகைப் பட ரசிகர்கள், விரும்பிகள் வித்யாசமான புகைப்படங்கள் எடுத்து இந்த நாளை கொண் டாடுகின்றனர்.
அதை பகிர்ந்து கொள்கின்றனர். சமூக வலை தளங்களில் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தும், புகைப்படம் தொடர்பான நிகழ்வு களில் தங்களை ஈடுபடுத்தியும் மகிழ்கின்றனர்.
காலநிலை மாற்றம் வானிலை மாற்றம் என்று எந்த நிலையும் அறியாமல் ஒவ்வொரு நொடிகளில் ஒளிந் திருக்கும் அற்புதங்களை திரையில் காட்டகூடியவர்கள் புகைப்பட கலைஞர்கள் அந்த வகையில் இயற்கை மற்றும் வன விலங்குகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் மட்டுமே இல்லாமல் வன உயிரினங்கள் மற்றும் பறவைகளின் முக்கிய துவம் பல்லுயிர் சூழலின் பங்கு குறித்தும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த மாணவர்களிடத்தில் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையை சேர்ந்த சிராஜ்தீன் .
ஒவ்வொரு புகைப்பட கலை ஞருக்கும், ஒரு ஸ்டைல் இருக்கும். அந்தவகையில் சிராஜ்தீன் வன உயிரினங்களைத் தேடி படம்பிடிப்பதையே தன்னுடைய ஸ்டைலாக கொண்டிருந்தார் அதற்காக கர்நாடகம் , கேரளா, மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு நீர் நிலைகள் வனப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்றுவந்தவர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அதில் கிடைத்த படங்களை பதிவு செய்திருக்கிறார்.
கோவையில் நல்ல சுற்றுச்சூழல் இயற்கை எழில்மிக்க இடங்கள் இருந்தன.
அங்குள்ள நீர்நிலைகள் நோக்கி மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா போன்ற நிறைய பறவைகள் வரும்.
அந்த பறவைகளை படம் எடுக்க வேண்டும் என்று தனக்கு ஆர்வத்தைத் தூண்டியதாகக் கூறும் அவர், விடுமுறை நாட்களில் கையில் கேமராவை தூக்கிக்கொண்டு வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதற்கு காடுகளை நோக்கி பயணித்து விடுகிறார்.