fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் சுற்றுலாவும் அமைதியும் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுற்றுலா தின விழா

சிதம்பரத்தில் சுற்றுலாவும் அமைதியும் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுற்றுலா தின விழா

உலக சுற்றுலா தின விழா – 2024 ஒவ்வொறு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு சுற்றுலாவும் அமைதியும் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மற்றும் இணையதளம் வாயிலாக பதிவு செய்தவர்களை கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாரத்தான் போட்டியை சிதம்பரம் சார் ஆட்சியர், துவக்கி வைத்தார்.

அதில் ஆண் மற்றும் பெண் இரு பிரிவுகளில் வெற்றி பெற்றவற்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி ரஷ்மி ராணி,பதிவாளர் (பொ), தேர்வு கட்டு ப்பாட்டு அதிகாரி பிரகாஷ் ஆகியோர் வழங்கினர்.

மேலும், மாரத்தான் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுலா அலுவலர் கண்ணன் அண்ணாமலை நகர் காவல் துறை இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், பிச்சாவரம் படகு இல்ல மேலாளர் பைசல் அகமது,உதவி சுற்றுலா அலுவலர் ரமேஷ் பாபு பங்கேற்றனர்

விழாவில் முக்கிய விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை சுற்றுலாத்துறையின் சார்பாக வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

இவ்விழாவினை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img